செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்

Tuesday, January 1, 2008

ஆபிதீன் கதைத்தொகுப்பு


தமிழ் வாசகர்களால் அதிகம் அறியப்படாத, ஆனால் மிகவும் சிறப்பாக எழுதும் படைப்பாளர்களுள் ஆபிதீன்ஒருவர். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் புத்தகக் கண்காட்சியில் அவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளிவருகிறது.

'உயிர்த்தலம்' என்ற தலைப்பில் எனி இந்தியன் பதிப்பகத்தார் இத்தொகுப்பை வெளியிடுகின்றார்கள்.

ஆபிதீனின் கதைகளில் நையாண்டி என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அம்சம். ஆனால் தனது எந்தக் கதையிலும் நையாண்டியை அவர் முதன்மையான அம்சமாக நிறுவுவதில்லை. ஆழமாகப் படிக்கிற வாசகர்களுக்கு அவருடைய கதைகள் வெளிப்படுத்தும் கேலிக்கு அப்பால் பரவிக்கிடக்கும் வலி புலப்படுவது நிச்சயம்.

சில காலம் முன்னர் எழுத்தாளர் சாரு நிவேதிதா - ஆபிதீன் இருவருக்கும் இடையிலான பிரச்னை இணையத்திலும் பிரதிபலித்தது நினைவிருக்கலாம். இருவரும் நாகூரில் வளர்ந்தவர்கள்.

ஆபிதீனைப் புரிந்துகொள்ள அவரது இந்தக் கதைத்தொகுப்பு நிச்சயம் உதவும் என்று எதிர்பார்க்கலாம். அவரது வேறு சில கதைகளை நீங்கள் இங்கே வாசிக்க முடியும்.

கண்காட்சியில் வெளியிடப்படும் பிற முக்கிய நூல்கள் குறித்து அவ்வப்போது இப்பகுதியில் சிறு தகவல்கள் தர முயற்சி மேற்கொண்டுள்ளோம். தேர்வு செய்து படிக்க விரும்பும் வாசகர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.

(அட்டைப்படம் நன்றி: எனி இந்தியன்.காம்)

3 comments:

சிறில் அலெக்ஸ் said...

வலைப்பதிவொன்று புத்தகமாக வெளிவர உள்ளது. ஆழி பதிப்பகத்தார் இதை செய்கிறார்கள்.

என்னுடைய முட்டம் குறித்த பதிவுகள்.

ChennaiBookFair08 said...

மிக நல்ல விஷயம். புத்தகம் குறித்த மேலதிக விவரங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்.

நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

என் புத்தகம் குறித்த பதிவின் சுட்டி
http://cyrilalex.com/?p=368