செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்

Thursday, January 10, 2008

சமூகத்தை மாற்றிய எழுத்தாளர்கள்

சென்ற ஆண்டு புத்தகக் கட்சியைத் தொடங்கிவைத்து உரையாற்றிய முதல்வர் அவர்கள், தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூபாய் ஒரு கோடியை நிதியாக வழங்கி, அந்த நிதி சேமிப்பிலிருந்து வரும் வருவாயிலிருந்து சமூக மாற்றாத்திற்காக எழுதுகின்ற சிறந்த ஐந்து எழுத்தாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழி வழங்கிட செய்திட்டார்கள்.

இவ்வாண்டு "கலைஞர் பொற்கிழி விருது” பெற்றுள்ள ஐந்து எழுத்தாளர்கள் என்னென்ன எழுதி சமூக மாற்றத்துக்கு வித்திட்டுள்ளார்கள் என்பதனை உள்ளடக்கிய சிறு வெளியீடொன்று புத்தகக் காட்சி அமைப்பாளர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. அதிலிருந்து சில துளிகள் இங்கே தரப்படுகின்றது.


மா.சு. சம்பந்தன்:

எட்டாவது படிக்கும் காலத்திலேயே “பண்டைய நாகரிகம்” “நான் பெரியவனானால்” என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதியுள்ளவர். மாணவப் பருவத்தில் பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றுள்ளார். ‘சிறந்த பேச்சாளர்' என்ற நூலும் ‘சென்னை மாநகர்', ‘அச்சுக்கலை', ‘கி.ஆ.பெ. வாழ்க்கை வரலாறு', ‘அச்சும் பதிப்பும்', ‘எழுத்தும் அச்சும்' ஆகியவை இவரது படைப்புகளாகும்.

புவியரசு:

எண்பது புத்தகங்கள் எழுதியுள்ளார். ஐந்து கவிதைத் தொகுதிகள் வந்துள்ளன. ‘மூன்றாம் பிறை' என்ற நாடகக் காவியம் மாநில அளவில் முதல் பரிசுக்கான தங்கப்பதக்கம் பெற்றுள்ளது. சேக்ஸ்பியர், கலீல் ஜிப்ரான், உமர்கையாம், ஓஷோ, கிரண்பேடி, தாகூர், நஸ்ருல் இஸ்லாம், அப்துல் கலாம் போன்றவர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

மு. ராமசாமி:

ஆசிரியராக, இணை ஆசிரியராக, தொகுப்பாசிரியராக 15 நூல்கள் எழுதியிருக்கின்றார். ‘தமிழக தோற்பாவை நிழற்கூத்து', ‘தமிழ்நாடகம் நேற்று இன்று நாளை', ‘திருநெல்வேலியில் திரௌபதை மானபங்கப்படுத்தப்பட்டபோது', ‘கலகக்காரர் தோழர் பெரியார்' ஆகியவை பரிசுகள் பெற்றவை.

சு. தமிழ்ச்செல்வி:

மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை, ஆறுகாட்டுதுறை என ஐந்து புதினங்களும் சாமுண்டி என்ற சிறுகதைத் தொகுப்பும் எழுதியுள்ளார். தொடர்ந்து “இலக்கிய இதழ்”களில் எழுதிவருகிறார்.

சாரா ஜோசப்:

Seven Short Story Collections, 4 Novels and 2 Collections of Essays. 2 Plays.

பின்குறிப்பு: பதினாறு பக்கங்கள் கொண்ட சிறு வெளியீட்டிலிருந்து “எழுத்தாளர்கள்” என்னென்ன எழுதியுள்ளனர் என்று விழாக்குழுவினர் குறிப்பிட்டுள்ள பகுதியினை மட்டும் இங்கு வெளியிட்டிருக்கின்றோம். சிறு வெளியீட்டினை முழுமையாக இங்கு வெளியிட இயலவில்லை. புத்தகக் காட்சி அரங்கினுள் உள்ள “பபாசி” அலுவலகத்தில் இவ்வெளியீடு இருக்கின்றது. விரும்பிக் கேட்பவர்களுக்குக் கிடைக்கக்கூடும்.

4 comments:

Vaa.Manikandan said...

//எட்டாவது படிக்கும் காலத்திலேயே “பண்டைய நாகரிகம்” “நான் பெரியவனானால்” என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதியுள்ளவர். மாணவப் பருவத்தில் பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றுள்ளார். //

சீரியஸாவே கேட்கிறேன்...நக்கல்தானே பண்ணுறீங்க? :)

ChennaiBookFair08 said...

ஐயா

நாங்கள் முன்னரே குறிப்பிட்டிருந்தபடி இந்தச் செய்தியில் “உள்நோக்கம்” எதுவும் நிச்சயமாய்க் கிடையாது. பபாசி அமைப்பினர் அளித்த சிறு பிரசுரத்தில் கண்ட சில வரிகளை அப்படியே இங்கு உள்ளிட்டிருக்கின்றோம். இது உங்களுக்குப் பல்வேறு அர்த்தங்கள் தருமானால் அதற்கு “பபாசி”யே அல்லாமல் நாங்கள் பொறுப்பாகமாட்டோம்.

ஹரன்பிரசன்னா said...

வாம, (வா.மணிகண்டனுக்கு சுருக்கமா) இப்பத்தான் உங்க கமெண்ட் பார்த்தேன். இன்னும் சிரிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். :))

ஐயா அனானி ப்ளாக்கரே, எனது நேற்றைய ஒரு கமெண்ட் கவனிப்பாரில்லாமல் கிடக்கிறது. கவனிக்கவும்.

ChennaiBookFair08 said...

ஹரன் பிரசன்னா அவர்களுக்கு,

வணக்கம். உங்கள் பின்னூட்டம் எதுவும் ”பெண்டிங்” பட்டியலில் இல்லையே? ஏதாவது விடுபட்டிருக்குமாயின் அதனைத் திரும்ப இடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

சிரமத்துக்கு மன்னிக்கவும்.